வெற்றி கிட்டும்போது வெறியாட்டம் போடுவதும், தோல்வி ஏற்படும்போது துவண்டு விடுவதும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குக் கூடாது என்பது இந்நாடகம் முன்வைக்கும் கருத்து. மூடிக்கிடக்கும் விழிகளைத் திறக்கத் தேவை பகுத்தறிவு மூலிகைகளே என்பதைச் சொல்லும் இந்நாடகத்தில் ‘அடக்கம்' என்னும் பெயரை ஒரு கதாபாத்திரத்திற்கு வைத்துக் கலைஞர் ஆடும் சொல் விளையாட்டு குறிப்பிடத்தக்கதாகும்.